ஐக்கிய நாடுகள் சபையின் பாலஸ்தீன அகதிகளுக்கான முகமைக்கு (UNRWA) நிதியுதவி வழங்குவதை அமெரிக்காவும் மற்ற எட்டு மேற்கத்திய நாடுகளும் இடை நிறுத்துவதற்கு முடிவு செய்துள்ளன.
காஸாவில் இரண்டு மில்லியன் பாலஸ்தீனியர்கள் UNRWA நிதிச் சேவைகளை சார்ந்து இருக்கின்றனர்.
அமெரிக்கா மற்றும் இதர எட்டு மேற்கத்திய நாடுகள் ஆனது UNRWA முகமையின் 2022 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் பாதிக்கும் மேலான தொகையை வழங்கி உள்ளன.
1948 ஆம் ஆண்டு அரேபிய-இஸ்ரேல் போரின் போது, தற்போது இஸ்ரேல் என்று அழைக்கப் படும் தங்களது தாயகத்திலிருந்து வெளியேறுமாறு நிர்ப்பந்திக்கப்பட்ட 700,000 பாலஸ்தீனியர்களுக்கு உதவுவதற்காக 1949 ஆம் ஆண்டில் UNRWA நிறுவப் பட்டது.
UNRWA ஆனது அமெரிக்கா போன்ற நிதி வழங்கீடு நாடுகளின் தன்னார்வப் பங்களிப்புகள் மூலமாக முழுமையாக நிதியளிக்கப்படுகிறது.
இது ஐக்கிய நாடுகள் சபையிடமிருந்து வரையறுக்கப்பட்ட மானியத்தையும் பெறச் செய்வதோடு இது நிர்வாகச் செலவுகளுக்கு மட்டுமே பயன்படுத்தப்படும்.