TNPSC Thervupettagam

UNSC அமைப்பின் நிரந்தரம் அல்லாத உறுப்பினர்

June 5 , 2020 1543 days 591 0
  • ஐக்கிய நாடுகள் பொதுச் சபையானது (UNSC - United Nations Security Council) தனது தேர்தலை 2020 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் நடத்த இருக்கின்றது.
  • 2021 ஆம் ஆண்டிலிருந்து 2022 ஆம் ஆண்டு வரையிலான பதவிக் காலத்திற்காக ஆசியா-பசிபிக் பகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்படும் நாடுகளில் இந்தியா வெற்றி பெறும் என்று மிகவும் எதிர்பார்க்கப் படுகின்றது.
  • இந்தப் பகுதியிலிருந்து போட்டியிடும் ஒரே நாடு இந்தியா ஆகும். இந்தியாவின் பெயரானது ஆசியா-பசிபிக் குழுவில் உள்ள அனைத்து 55 உறுப்பு நாடுகளாலும் முன்மொழியப் பட்டுள்ளது.
  • UNSC தேர்தல்கள் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை அரங்கில் நடைபெறுகின்றது. ஐக்கிய நாடுகள் அமைப்பில் உறுப்பினராக உள்ள 193 நாடுகளும் இரகசிய வாக்கு முறையில் தங்களது வாக்கைச் செலுத்துகின்றன.
  • பிராந்திய அடிப்படையில் நிரந்தரம் அல்லாத 10 உறுப்பு நாடுகளுக்கான இடங்கள் பின்வருமாறு பிரிக்கப் பட்டுள்ளன. அவையாவன
    • ஆப்பிரிக்கா மற்றும் ஆசிய நாடுகளுக்கு 5 இடங்கள்
    • இலத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியப் பகுதி நாடுகளுக்கு 2 இடங்கள்
    • மேற்கு ஐரோப்பா மற்றும் இதர நாடுகளுக்கு 2 இடங்கள்
    • கிழக்கு ஐரோப்பிய நாடுகளுக்கு 1 இடம்

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்