ஐ.நா. பொதுச் சபையின் பாதுகாப்பு அவையின் தற்காலிக உறுப்பினர்களாக கீழ்க்காணும் 5 நாடுகள் பொறுப்பேற்றுள்ளன.
பெல்ஜியம்
டொமினியன் குடியரசு
ஜெர்மனி
இந்தோனேஷியா
தென் ஆப்பிரிக்கா
இந்த 5 நாடுகளும் 2019 ஜனவரி 1 முதல் அடுத்த இரண்டு ஆண்டு காலத்திற்கு பாதுகாப்பு அவையில் உறுப்பினர்களாக இருக்கும்.
டொமினியன் குடியரசானது முதன்முறையாக பாதுகாப்பு அவையில் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
பொலிவியா, எத்தியோப்பியா, கஜகஸ்தான், நெதர்லாந்து மற்றும் ஸ்வீடன் ஆகிய 5 நாடுகள் 2018 டிசம்பர் 31 ஆம் தேதி தனது 2 வருட காலத்தை முடித்த இடத்தினை இந்த நாடுகள் நிரப்பியுள்ளன.