TNPSC Thervupettagam

UNSCற்கான தேர்தல்

June 23 , 2020 1525 days 542 0
  • சமீபத்தில் இந்தியா, நார்வே, அயர்லாந்து, மெக்சிகோ மற்றும் கென்யா ஆகிய நாடுகள் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 01 ஆம் தேதியிலிருந்து அடுத்த 2 ஆண்டு காலத்திற்கு ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தரல்லாத உறுப்பு நாடுகளாகத் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.
  • ஒவ்வொரு ஆண்டும், பொதுச் சபையானது  2 ஆண்டு காலத்திற்கு 5 நிரந்தரல்லாத உறுப்பு நாடுகளை (மொத்தம் 10 நாடுகளில்) தேர்ந்தெடுக்கின்றது.
  • இதற்கு முன்பு இந்தியா, 1950-51, 1967-68, 1972-73, 1977-78, 1984-85, 1991-92 ஆகிய காலக்கட்டங்களிலும் சமீபத்தில் 2011-12 ஆகிய ஆண்டுகளிலும் இதில் உறுப்பினராக  தேர்ந்தெடுக்கப் பட்டது.
  • இந்த ஆணையத்தின் தலைமையானது உறுப்பு நாடுகளின் பெயர்களில் ஆங்கில எழுத்தின் அகரவரிசைப் படி ஒவ்வொரு மாதத்திற்கும் சுழற்சி முறையில் உறுப்பு நாடுகளால் வகிக்கப் படுகின்றது.
  • இந்தியாவானது இந்த ஆணையத்தின் சுழற்சி முறை தலைமைப் பதவியினை 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்க இருக்கின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்