TNPSC Thervupettagam

UNWTO-இன் 7வது உலகளாவிய நகர்ப்புற சுற்றுலா உச்சி மாநாடு

September 19 , 2018 2260 days 673 0
  • தென் கொரியாவின் தலைநகரான சியோலில், செப்டம்பர் 16 முதல் 19 வரை UNWTO-இன் (United Nations World Tourism Organization) 7வது உலகளாவிய நகர்ப்புற சுற்றுலா உச்சி மாநாடு நடத்தப் பட்டது.
  • இந்த மாநாட்டின் கருத்துருவானது “2030 நகர்ப்புற சுற்றுலாவுக்கான பார்வை” (A 2030 Vision for Urban Tourism) என்பதாகும்.
  • இந்த உச்சி மாநாடானது
    • உலக சுற்றுலா அமைப்பு (UNWTO),
    • சியோல் பெருநகர அரசாங்கம்

ஆகிய அமைப்புகளால் ஒழுங்கு செய்யப்பட்டு தென்கொரியாவின் கலாச்சார, விளையாட்டு மற்றும் சுற்றுலா அமைச்சகம், கொரியா சுற்றுலா அமைப்பு மற்றும் சியோல் சுற்றுலா அமைப்பு ஆகியவற்றின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

  • UNWTO ஆனது ஸ்பெயினின் மாட்ரிட்டில் அமைந்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாண்மை நிறுவனம் ஆகும். இது பொறுப்பான, நிலையான மற்றும் உலகளாவிய அளவில் அணுகக்கூடிய சுற்றுலாத் தன்மையை மேம்படுத்துதலை பணியாகக் கொண்டது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்