TNPSC Thervupettagam

UPAg இணைய தளம்

September 21 , 2023 305 days 224 0
  • மத்திய அரசானது வேளாண் புள்ளி விவரங்களுக்கான ஒருங்கிணைந்த இணைய தளத்தினை (UPAg Portal- www.upag.gov.in) அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது பயனர்களுக்கான தேடல் செலவினங்கள் மற்றும் திறன் குறைபாடு ஆகியவற்றினைக் குறைப்பதோடு நம்பகமான, நுண்ணிய மற்றும் மெய்நிலைத் தரவுகளுக்கான அணுகலைப் பெறுவதை ஒழுங்குமுறைப்படுத்தி, ஒரு பொது வள மையமாக செயல்படும் நோக்கம் கொண்டு உருவாக்கப்பட்டது.
  • UPAg இணைய தளத்தின் முக்கியச் செயல்பாடானது பயிர் மதிப்பீடுகளை உருவாக்குவது மற்றும் வேளாண்மை தொடர்பான பிற புள்ளிவிவர அமைப்புகளுடன் ஒருங்கிணைப்பது ஆகியனவாகும்.
  • இது தரப்படுத்தப்படாத மற்றும் சரிபார்க்கப் படாத தரவு போன்றச் சவால்களை எதிர்த்துப் போராடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளதோடு, இந்தியாவின் வேளாண் துறையில் தரவு சார்ந்த முடிவெடுக்கும் செயல்முறையையும் ஆதரிக்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்