ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகம் ஆனது, 2023 ஆம் ஆண்டில் உச்சகட்டப் பரிவர்த்தனைகளை எட்டியதோடு பரிவர்த்தனை எண்ணிக்கை மற்றும் மதிப்பு ஆகிய இரண்டின் அடிப்படையிலும் இது புதிய சாதனையைப் பதிவு செய்துள்ளது.
டிசம்பர் மாதத்தில் 1,200 கோடிக்கும் அதிகமான பரிவர்த்தனைகள் மேற்கொள்ளப் பட்டுள்ளதோடு அவற்றின் மதிப்பு 18 லட்சம் கோடி ரூபாய்க்கும் அதிகமாக இருந்தது.
2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் ஏற்கனவே உச்சத்தில் இருந்த 17.4 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான பரிவர்த்தனையுடன் ஒப்பிடுகையில் இது ஒரு சிறிய அளவிலான அதிகரிப்பு ஆகும்.
2023 ஆம் ஆண்டில் 182.2 லட்சம் கோடி மதிப்பிலான 11,765 UPI பரிவர்த்தனைகள் மேற் கொள்ளப் பட்டன.
2022 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது, இது அளவின் அடிப்படையில் 59 சதவீதமும், மதிப்பின் அடிப்படையில் 45 சதவீதமும் அதிகரித்துள்ளது.