ஃபோன்பே நிறுவனமானது ‘ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலி மூலமான சர்வதேச அளவிலான பண வழங்கீடுகளுக்கான தனது வசதியினை வழங்கத் தொடங்கியுள்ளது.
இந்த வசதியானது, வெளிநாடு செல்லும் இந்தியப் பயனர்கள் ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலியினைப் பயன்படுத்தி வெளிநாட்டு வணிகர்களுக்குப் பணம் செலுத்த வழிவகை செய்யும்.
தற்போது அறிமுகப்படுத்தப்பட்ட இந்த வசதியானது ஐக்கிய அரபு அமீரகம், சிங்கப்பூர், மொரீஷியஸ், நேபாளம் மற்றும் பூடான் ஆகிய நாடுகளில் உள்ள உள்நாட்டு விரைவுக் குறியீடுகளைக் கொண்ட சர்வதேச வணிக விற்பனை நிலையங்களில் வழங்கப் படுகிறது.
இந்தியாவில் இந்த வசதியினை அறிமுகப்படுத்திய முதல் நிதிசார் தொழில்நுட்பச் செயலி ஃபோன்பே ஆகும்.