இந்தியாவின் முதன்மை டிஜிட்டல் பணவழங்கீட்டுத் தளமான ஒருங்கிணைந்த பண வழங்கீட்டு இடைமுகத்தில் (UPI), 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் ரூ.9.83 டிரில்லியன் மதிப்புள்ள 5.58 பில்லியன் பரிவர்த்தனைகள் பதிவாகியுள்ளது.
ஒருங்கிணைந்தப் பணவழங்கீட்டு இடைமுகத்தில் இதுவரையில் பதிவுசெய்யப்பட்ட அதிகபட்சப் பரிவர்த்தனைகள் இதுவாகும்.
2021 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும் போது, பரிவர்த்தனைகளின் அளவு 111 சதவீதமும், பரிவர்த்தனைகளின் மதிப்பானது கிட்டத்தட்ட 100 சதவீதமும் அதிகரித்து உள்ளது.