இந்திய ரிசர்வ் வங்கியானது UPI123 மற்றும் UPI Lite ஆகியவற்றின் மீதான பரிவர்த்தனை வரம்புகளை அதிகரிப்பதாக அறிவித்துள்ளது.
தற்போது, UPI123Pay இடைமுகத்தில் ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பு 5,000 ரூபாய் ஆக உள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பை 10,000 ரூபாயாக உயர்த்த முடிவு செய்துள்ளது.
தற்போது, UPI Lite இடைமுகமானது, ஒரு பரிவர்த்தனைக்கு 500 மற்றும் ஒட்டு மொத்த UPI Lite பணக்கோப்பு (வாலெட்) வசதிக்கு 2,000 ரூபாய் என்ற வரம்பைக் கொண்டுள்ளது.
இது ஒரு பரிவர்த்தனைக்கான வரம்பினை 1,000 ரூபாயாகவும், மொத்த பணக்கோப்பு வரம்பினை 5,000 ரூபாயாகவும் உயர்த்தியுள்ளது.