TNPSC Thervupettagam

UPI - உலகின் முன்னணி எண்ணிமப் பண வழங்கீட்டுத் தளம்

September 12 , 2024 71 days 114 0
  • ஒருங்கிணைந்தப் பண வழங்கீட்டு இடைமுகச் செயலி அல்லது UPI ஆனது, இந்த ஆண்டின் ஏப்ரல்-ஜூலை மாத காலக் கட்டத்தில் சுமார் 81 லட்சம் கோடி ரூபாய் அளவிலான பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியுள்ளது.
  • இது உலகின் முன்னணி எண்ணிமப் பண வழங்கீட்டுத் தளங்களை மிஞ்சியுள்ளது.
  • இந்த பரிவர்த்தனை பதிவானது வருடாந்திர வீதம் (YoY) அடிப்படையில் 37% அதிகரிப்பு என்று குறிப்பிடப்படுகிறது.
  • Paysecure எனப்படும் உலகளாவியப் பண வழங்கீட்டு மையத்தின் படி, UPI ஆனது வினாடிக்கு 3,729.1 பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தியது.
  • 2022 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட, ஒவ்வொரு வினாடிக்கும் 2,348 என்ற அளவு பரிவர்த்தனைகளை விட இது 58% உயர்வாகும்.
  • இந்தத் தரவின் மூலம், செயலாக்கப்பட்டப் பரிவர்த்தனைகளின் எண்ணிக்கையில் சீனாவின் அலிபே, பேபால் மற்றும் பிரேசிலின் PIX ஆகியவற்றினை UPI விஞ்சியுள்ளது.
  • UPI ஆனது 2023 ஆம் ஆண்டில் 117.6 பில்லியன் பரிவர்த்தனைகளை செயல்படுத்தியது என்ற அளவில் இது உலகிலேயே மிக அதிகமாகும்.
  • 2023-24 ஆம் ஆண்டில் 131 பில்லியனாக இருந்த UPI பரிவர்த்தனைகள் 2028-29 ஆம் ஆண்டிற்குள் 439 பில்லியனாக மூன்று மடங்கு அதிகரிக்கும் என்று சில அறிக்கைகள் கணித்துள்ளன.
  • இது அனைத்து சில்லறை எண்ணிமப் பரிவர்த்தனைகளில் 91% ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்