இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் ஆனது (NCPI) சமீபத்தில் "UPI சுற்றம்" என்ற ஒரு புதிய அம்சத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
இது பயனர்கள் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் தங்கள் கணக்கைப் பயன்படுத்திப் பணம் செலுத்த வழி வகுக்கிறது.
இந்தப் புதியதொரு செயல்பாடானது, தங்கள் தேவைகளுக்காகப் பிறரைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உதவுவதோடு, இந்தியா முழுவதும் எண்ணிம முறையில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
இந்த அமைப்பானது, கணக்கு வைத்திருப்பவரை முதன்மைப் பயனராகக் கொண்டு, அவர் இரண்டாம் நிலை பயனரைக் கட்டுப்படுத்தும் வசதியினைக் கொண்டுள்ளது.
மேலும், இந்தப் பயனாளர் வசதியில் இரண்டு வகைகள் உள்ளன, அவை - முழு மற்றும் பகுதியளவு பயனாளர்.
முழு அளவிலானப் பயனாளர்களுக்கு, ஒரு பயனாளருக்கான மாதாந்திர வரம்பு 15,000 ரூபாயாகவும், இரண்டாம் நிலைப் பயனர்களுக்கான பரிவர்த்தனை வரம்பு 5,000 ரூபாயாகவும் வரையறுக்கப் பட்டுள்ளது.