TNPSC Thervupettagam
August 27 , 2024 87 days 158 0
  • இந்தியத் தேசியக் கொடுப்பனவுக் கழகம் ஆனது (NCPI) சமீபத்தில் "UPI சுற்றம்" என்ற ஒரு புதிய அம்சத்தினை அறிமுகப் படுத்தியுள்ளது.
  • இது பயனர்கள் தங்கள் குடும்பத்தினரையும் நண்பர்களையும் தங்கள் கணக்கைப் பயன்படுத்திப் பணம் செலுத்த வழி வகுக்கிறது.
  • இந்தப் புதியதொரு செயல்பாடானது, தங்கள் தேவைகளுக்காகப் பிறரைச் சார்ந்து இருப்பவர்களுக்கு உதவுவதோடு, இந்தியா முழுவதும் எண்ணிம முறையில் பணப் பரிமாற்றம் மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும்.
  • இந்த அமைப்பானது, கணக்கு வைத்திருப்பவரை முதன்மைப் பயனராகக் கொண்டு, அவர் இரண்டாம் நிலை பயனரைக் கட்டுப்படுத்தும் வசதியினைக் கொண்டுள்ளது.
  • மேலும், இந்தப் பயனாளர் வசதியில் இரண்டு வகைகள் உள்ளன, அவை - முழு மற்றும் பகுதியளவு பயனாளர்.
  • முழு அளவிலானப் பயனாளர்களுக்கு, ஒரு பயனாளருக்கான மாதாந்திர வரம்பு 15,000 ரூபாயாகவும், இரண்டாம் நிலைப் பயனர்களுக்கான பரிவர்த்தனை வரம்பு 5,000 ரூபாயாகவும் வரையறுக்கப் பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்