மத்தியக் குடிமைப் பணிகள் தேர்வாணயத்தின் (UPSC) தலைவர் டாக்டர் மனோஜ் சோனி அந்த உயர் பதவியில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
அவரது பதவிக் காலம் 2029 ஆம் ஆண்டு மே 15 ஆம் தேதியன்று முடிவடைய இருந்தது.
அவர் 2017 ஆம் ஆண்டு ஜூன் 28 ஆம் தேதியன்று ஆணையத்தின் உறுப்பினராகப் பொறுப்பேற்றார் மற்றும் 2023 ஆம் ஆண்டு மே 16 ஆம் தேதியன்று அந்த ஆணையத்தின் தலைவராகப் பதவியேற்றார்.
2005 ஆம் ஆண்டில், சோனி இந்தியாவின் இளம் துணைவேந்தராகப் பதவியேற்றார்.
UPSC என்பது ஒரு சுதந்திரமான அரசியலமைப்பு சார் அமைப்பாகும்.
UPSC ஆணையத்தின் அதிகாரங்கள் மற்றும் செயல்பாடுகள் என்பது இந்திய அரசியலமைப்பின் XIV என்ற பகுதியின் 315 முதல் 323வது பிரிவு வரை வழங்கப் பட்டு உள்ளன.
UPSC ஆணையத்தின் எந்தவொரு உறுப்பினரும் ஆறு ஆண்டுகள் அல்லது 65 வயது வரையில், இவற்றுள் எது முந்தையதோ அதுவரை அந்தப் பதவியில் இருப்பார்.
இந்த ஆணையத்தின் உறுப்பினர்கள் அதன் தலைவர் பதவியைத் தவிர அந்தப் ஆணையத்தின் மற்ற பதவிகளுக்கு மறு நியமனம் செய்யத் தகுதியற்றவர்கள் ஆவர்.
UPSC உறுப்பினர் ஒருவர் இந்தியக் குடியரசுத் தலைவரிடம் எழுத்துப்பூர்வ ராஜினாமா கடிதத்தினைச் சமர்ப்பித்து விட்டு தனது பதவியை ராஜினாமா செய்யலாம்.