அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் ஆனது, வெளிநாடுகளில் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்காக என்று முக்கியப் பொறுப்புகளைக் கொண்டுள்ள அமெரிக்க நிறுவனத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செய்துள்ளது.
அப்போதைய அதிபர் ஜான் F. கென்னடி அவர்கள் பனிப் போரின் போது USAID எனப் படும் அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிறுவனத்தை நிறுவினார்.
காங்கிரஸ் ஆனது வெளிநாட்டு உதவிச் சட்டத்தை நிறைவேற்றியது என்ற நிலையில் கென்னடி 1961 ஆம் ஆண்டில் அந்த USAID அமைப்பினை ஒரு தன்னாட்சி நிறுவனமாக நிறுவினார்.
சில நாடுகளுக்கு அமெரிக்காவினால் வழங்கப் படும் உதவி இன்னமும் ரஷ்ய மற்றும் சீன நாடுகளின் செல்வாக்கை எதிர்க்கின்றது என்று USAID அமைப்பின் ஆதரவாளர்கள் வாதிட்டனர்.
பதவியேற்ற முதல் நாளில், டிரம்ப் வெளிநாட்டு உதவியை 90 நாட்களுக்கு நிறுத்தி உள்ளார்.