TNPSC Thervupettagam

USCIRF வருடாந்திர அறிக்கை 2025

April 2 , 2025 8 hrs 0 min 40 0
  • சர்வதேசச் சமய சுதந்திரத்திற்கான அமெரிக்க ஆணையம் (USCIRF) ஆனது, சமீபத்தில் அதன் 2025 ஆம் ஆண்டிற்கான வருடாந்திர அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • மதச் சுதந்திர மீறல்கள் காரணமாக இந்தியாவை "குறிப்பிடத் தக்க வகையில் கவலை கொள்ள வைக்கும் நாடு" (CPC) என்று நியமிக்க இது பரிந்துரைக்கிறது.
  • ஆயுத ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுச் சட்டத்தின் 36வது பிரிவின் கீழ் இந்தியாவிற்கு மேற் கொள்ளப் படும் MQ-9B ஆளில்லா விமானங்கள் போன்ற ஆயுதங்களின் விற்பனையை மறுபரிசீலனை செய்யவும் அமெரிக்க அரசாங்கத்திற்கு இது பரிந்துரைத்துள்ளது.
  • 2024 ஆம் ஆண்டில் இந்தியாவில் உள்ள 28 மாநிலங்களில், 12 மாநிலங்கள் ஏற்கனவே உள்ள மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களை அறிமுகப்படுத்த அல்லது நன்கு வலுப்படுத்த முயற்சித்தன.
  • 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், "குஜராத் மாநில அரசு ஆனது, புத்த மதம், சீக்கியம் அல்லது சமண மதத்திற்கு என மாற விரும்பும் இந்துக்கள் தங்கள் மாவட்ட ஆட்சியர் அதிகாரியிடமிருந்து அதற்கான ஒப்புதலைப் பெற வேண்டும் என்று வலியுறுத்தும் ஒரு சுற்றறிக்கையினை வெளியிட்டது".

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்