TNPSC Thervupettagam

USGBC LEED பசுமை கட்டிடச் சான்றிதழ் அறிக்கை 2024

February 11 , 2025 11 days 82 0
  • அமெரிக்கப் பசுமை கட்டிடச் சபையின் (USGBC), எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மீதான வடிவமைப்பில் முன்னணித்துவத்தில் (LEED) சிறந்து விளங்கும் 10 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் வருடாந்திரப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
  • 2024 ஆம் ஆண்டில் உலகளவில் USGBC சபையின் LEED பசுமைக் கட்டிடச் சான்றிதழில் இந்தியா மூன்றாவது இடத்தில் இடம் பெற்றது.
  • இந்தியாவில் LEED சான்றிதழ்கள் ஆனது பசுமை வணிகச் சான்றிதழ் நிறுவனத்தினால் (GBCI) நிர்வகிக்கப்படுகின்றன.
  • இது நாடு முழுவதும் பசுமைக் கட்டிட முறைகளை மிக நன்கு ஏற்று கட்டமைப்பதனை விரைவுபடுத்தச் செய்வதற்காக இது செயலாற்றுகிறது.
  • 2024 ஆம் ஆண்டிற்கான முதல் 10 இடங்களில், சுமார் 25 மில்லியனுக்கும் அதிகமான GSM சான்றிதழுடன் சீனா முதலிடத்திலும், 10 மில்லியன் GSM சான்றிதழுடன் கனடா இரண்டாவது இடத்திலும் உள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்