அமெரிக்கப் பசுமை கட்டிடச் சபையின் (USGBC), எரிசக்தி மற்றும் சுற்றுச்சூழல் மீதான வடிவமைப்பில் முன்னணித்துவத்தில் (LEED) சிறந்து விளங்கும் 10 நாடுகள் மற்றும் பிராந்தியங்களின் வருடாந்திரப் பட்டியல் சமீபத்தில் வெளியிடப்பட்டது.
2024 ஆம் ஆண்டில் உலகளவில் USGBC சபையின் LEED பசுமைக் கட்டிடச் சான்றிதழில் இந்தியா மூன்றாவது இடத்தில் இடம் பெற்றது.
இந்தியாவில் LEED சான்றிதழ்கள் ஆனது பசுமை வணிகச் சான்றிதழ் நிறுவனத்தினால் (GBCI) நிர்வகிக்கப்படுகின்றன.
இது நாடு முழுவதும் பசுமைக் கட்டிட முறைகளை மிக நன்கு ஏற்று கட்டமைப்பதனை விரைவுபடுத்தச் செய்வதற்காக இது செயலாற்றுகிறது.
2024 ஆம் ஆண்டிற்கான முதல் 10 இடங்களில், சுமார் 25 மில்லியனுக்கும் அதிகமான GSM சான்றிதழுடன் சீனா முதலிடத்திலும், 10 மில்லியன் GSM சான்றிதழுடன் கனடா இரண்டாவது இடத்திலும் உள்ளன.