இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறை (DoT) ஆனது, 2024 ஆம் ஆண்டு ஏப்ரல் 15 ஆம் தேதி முதல் USSD அடிப்படையிலான அழைப்பு பகிர்தல் சேவைகளை செயலிழக்கச் செய்ய உத்தரவிட்டுள்ளது.
கைபேசி பயனர்கள் தங்கள் தனிப்பட்டத் தரவு மற்றும் நிதிப் பாதுகாப்பை பாதிக்கும் மோசடி நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் பாதுகாப்பதை இந்த நடவடிக்கை முதன்மை நோக்கமாகக் கொண்டுள்ளது.
USSD (கட்டமைக்கப் படாத துணைச் சேவைத் தரவு) என்பது பயனர்கள் தங்கள் விசைப் பலகைகளில் குறிப்பிட்டக் குறியீடுகளை உள்ளீடு செய்வதன் மூலம் பல்வேறு தொலை பேசிச் சேவைகளை அணுக அனுமதிக்கும் ஓர் அம்சமாகும்.