- அமெரிக்காவின் வர்த்தகப் பிரதிநிதிகள் (United States Trade Representative - USTR) அமைப்பானது வளரும் நாடுகளின் பட்டியலிலிருந்து இந்தியாவை நீக்கியுள்ளது.
- இந்தப் பட்டியலில் உள்ள நாடுகளானவை ஈடுசெய் வரிகள் (Countervailing duties) தொடர்பாக முன்னுரிமை நன்மைகளை கோரத் தகுதியுடைய நாடுகளாகும்.
- தற்போது USTR அமைப்பானது இந்தியாவுடன் சேர்த்து வேறு சில நாடுகளையும் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கியுள்ளது.
- அமெரிக்கா இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு ஈடுசெய் வரி விதிப்பதை இது எளிதாக்கும்.
இந்தியா நீக்கப்பட்டதற்கான காரணம்
- USTR அமைப்பின் கூற்றுப்படி, 2017 ஆம் ஆண்டில் உலகளாவிய வர்த்தகத்தில் இந்தியாவின் பங்கு ஏற்றுமதியில் 2.1% ஆகவும், இறக்குமதியில் 2.6% ஆகவும் இருந்தது.
- இந்தியா ஜி20 உறுப்பு நாடுகளின் பொருளாதாரத்தில் உலகளாவிய பொருளாதார உற்பத்தி மற்றும் வர்த்தகத்தின் பெரிய பங்குகளைக் கொண்டுள்ளது.
- மேலும், ஜி20 நாடுகளின் அமைப்பில் இந்தியா ஒரு பகுதியாக இருக்கின்ற காரணத்தால் 12,375 டாலருக்கும் குறைவான தனிநபர் மொத்த தேசிய வருமானம் கொண்ட நாடாக இருந்த போதிலும் இந்தியாவை ஒரு வளர்ந்த நாடாக வகைப்படுத்தலாம்.