TNPSC Thervupettagam

மனித மூளையில் நுண்நெகிழிகள்

September 3 , 2024 38 days 110 0
  • முதன்முறையாக, மனித மூளையில் நுண்நெகிழிகளை ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்துள்ளனர்.
  • 2016 மற்றும் 2024 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் இந்த மூளை மாதிரிகளில் உள்ள நெகிழிகளின் எண்ணிக்கை சுமார் 50% அதிகரித்துள்ளது என்றும் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர்.
  • நுண்நெகிழிகள் மிகவும் பொதுவாக அசுத்தமான உணவு மற்றும் நீர் மூலம் உடலுக்குள் நுழைகிறது.
  • இது குடல் நுண்ணுயிரியை (குடலில் உள்ள நுண்ணுயிரிகளின் சமூகம்) சீர்குலைத்து வீக்கத்தை ஏற்படுத்தும்.
  • இது நோயெதிர்ப்பு அமைப்பு மற்றும் சிக்கலான, இருவழி தொடர்பு அமைப்பு வழியாக முழு உடலிலும் விளைவுகளை ஏற்படுத்துகிறது
  • நுண்நெகிழிகள் என்பவை ஐந்து மில்லிமீட்டருக்கும் குறைவான அளவுடையவை.
  • இது சிலவற்றை வெறும் நிர்வாணக் கண்ணால் பார்க்க முடியாத அளவுக்கு சிறியதாக ஆக்குகிறது.
  • பல குடிநீர் ஆதாரங்கள் மற்றும் அன்றாட உணவுப் பொருட்களில் இவற்றின் இருப்பு பதிவாகியுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்