அசாமின் மாநிலச் சட்டமன்றம் முஸ்லீம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளைப் பதிவு செய்வதற்கான 1935 சட்டத்தை ரத்து செய்து, அதற்குப் பதிலாக புதிய சட்டத்தை நிறைவேற்றி உள்ளது.
இந்த 1935 சட்டத்தில் சிறார்களுக்கிடையேயான திருமணங்களுக்கு வாய்ப்பு உள்ளது.
முஸ்லீம் திருமணங்கள் மற்றும் விவாகரத்துகளுக்கான அசாம் மாநில கட்டாயப் பதிவு மசோதா, 2024 என இதற்கு பெயரிடப் பட்டுள்ளது.
இந்தப் புதிய மசோதாவின் கீழ் பதிவு செய்யும் செயல்பாடுகள் அந்தப் பகுதியின் திருமணம் மற்றும் விவாகரத்துப் பதிவாளராக உள்ள துணைநிலை பதிவாளரால் மேற் கொள்ளப் பட வேண்டும்.
பலதார மணத்தைத் தடை செய்வதற்கான சட்டத்தை அறிமுகப்படுத்தவும் அசாம் அரசு திட்டமிட்டுள்ளது.