சென்னை நகர்ப்புறப் பகுதியில் வெள்ள அபாயத்தைத் தணித்தல் மற்றும் மேலாண்மை தொடர்பான ஆலோசனைக் குழுவைத் தலைமையேற்று நடத்தச் செய்வதற்காக ஓய்வு பெற்ற இந்திய குடிமைப்பணி அதிகாரி V. திருப்புகழ் என்பவரை தி.மு.க அரசு நியமித்துள்ளது.
இவர் குஜராத் மாநிலத்தில் முதலமைச்சர் நரேந்திர மோடியின் கீழும், பிரதமரான பிறகு தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்திலும் பணி புரிந்துள்ளார்.
திருப்புகழ் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தில் பணி புரிந்த போது 2017 ஆம் ஆண்டு ஜுன் மாதத்தில் சென்னை மற்றும் காஞ்சிபுரம் வந்த ஒரு குழுவிற்குத் தலைமை தாங்கினார்.
‘தமிழ்நாடு வெள்ளங்கள் – கற்றப் பாடங்களும் & சிறந்த நடைமுறைகளும்’ என்ற ஒரு தலைப்பில் தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட அறிக்கையில் இவரது குழு மேற்கொண்ட கண்டுபிடிப்புகள் இடம் பெற்றன.