TNPSC Thervupettagam

தமிழகத்தின் சொந்த வரி வருவாய் 2023

December 18 , 2023 343 days 310 0
  • இந்திய ரிசர்வ் வங்கி, ‘மாநில நிதி: 2023-24 ஆம் ஆண்டு நிதிநிலை அறிக்கை ஆய்வு’ என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • தமிழகத்தின் ஒட்டுமொத்த வரி வருவாயில், மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் (SOTR) பங்களிப்பு நிலையாக 70 சதவீதத்திற்கு மேல் உள்ளது.
  • இந்தத் தரவுகளின்படி, சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகத்திற்கு முந்தைய கால கட்டமான 2015-16 ஆம் ஆண்டு முதல் 2016-17 ஆம் ஆண்டு வரையிலான கால கட்டத்தில் தமிழ்நாட்டின் மொத்த வரி வருவாயில் 78.8% மாநிலத்தின் சொந்த வரி வருவாய் ஆகும்.
  • 2018-19 முதல் 2019-20 ஆம் ஆண்டு வரையிலான சரக்கு மற்றும் சேவை வரி அறிமுகத்திற்கு பிந்தைய மற்றும் கோவிட் பெருந்தொற்றிற்கு முந்தைய கால கட்டத்தில் மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் பங்கு 79.1% ஆக இருந்தது.
  • கோவிட் பெருந்தொற்றிற்கு பின், மாநிலத்தின் சொந்த வரி வருவாயின் பங்கு 78.9% ஆக இருந்தது.
  • ஹரியானா, மகாராஷ்டிரா, தெலுங்கானா, தமிழ்நாடு, குஜராத், கர்நாடகா, கேரளா மற்றும் பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மொத்த வரி வருவாயில் 70 சதவீதத்திற்கும் அதிகமாக SOTR உள்ளது.
  • பீகார் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் இது 50 சதவீதத்திற்கும் குறைவு ஆகும்.
  • உத்தரப் பிரதேசத்தின் மொத்த வரி வருவாயில் SOTR பங்கு 45.6% முதல் 54% வரை இருந்தது, அதே சமயம் மத்தியப் பிரதேசத்தின் மொத்த வரி வருவாயில் SOTR பங்கு 50 முதல் 51% வரை ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்