TNPSC Thervupettagam

VAIBHAV புத்தாய்வு மாணவர் திட்டம்

January 30 , 2024 172 days 179 0
  • இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்களை ஓராண்டில் அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றச் செய்வதற்காக VAIBHAV புத்தாய்வு மாணவர் திட்டத்தினை அரசாங்கம் தொடங்கி உள்ளது.
  • இந்தப் புத்தாய்வு மாணவர் திட்டமானது வெளிநாடு வாழ் இந்தியராக உள்ள ஆராய்ச்சியாளர்களை இந்தியாவில் உள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம் அல்லது ஒரு கல்வி நிறுவனத்தில் ஓராண்டிற்கு குறைந்தபட்சமாக ஒரு மாதம் முதல் அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரை பணிபுரிவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
  • இந்தப் புத்தாய்வு மாணவர் திட்டத்தின் காலம் ஆனது, மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த முழு காலத்திற்கும் அரசாங்கம் ஆராய்ச்சியாளர்களுக்கு 37 லட்சம் ரூபாய் வரை வழங்குகிறது.
  • இது 2018 ஆம் ஆண்டின் குறுகிய கால (வருகை) மேம்பட்ட கூட்டு ஆராய்ச்சி ஆசிரியர் (வஜ்ரா) திட்டத்தைப் போன்றது ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்