இந்திய வம்சாவளி ஆராய்ச்சியாளர்களை ஓராண்டில் அதிகபட்சமாக இரண்டு மாதங்களுக்கு இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிறுவனங்களில் பணியாற்றச் செய்வதற்காக VAIBHAV புத்தாய்வு மாணவர் திட்டத்தினை அரசாங்கம் தொடங்கி உள்ளது.
இந்தப் புத்தாய்வு மாணவர் திட்டமானது வெளிநாடு வாழ் இந்தியராக உள்ள ஆராய்ச்சியாளர்களை இந்தியாவில் உள்ள ஓர் ஆராய்ச்சி நிறுவனம் அல்லது ஒரு கல்வி நிறுவனத்தில் ஓராண்டிற்கு குறைந்தபட்சமாக ஒரு மாதம் முதல் அதிகபட்சமாக இரண்டு மாதங்கள் வரை பணிபுரிவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.
இந்தப் புத்தாய்வு மாணவர் திட்டத்தின் காலம் ஆனது, மூன்று ஆண்டுகள் ஆகும். இந்த முழு காலத்திற்கும் அரசாங்கம் ஆராய்ச்சியாளர்களுக்கு 37 லட்சம் ரூபாய் வரை வழங்குகிறது.
இது 2018 ஆம் ஆண்டின் குறுகிய கால (வருகை) மேம்பட்ட கூட்டு ஆராய்ச்சி ஆசிரியர் (வஜ்ரா) திட்டத்தைப் போன்றது ஆகும்.