TNPSC Thervupettagam

VAIBHAV புத்தாய்வு மாணவர் திட்டம்

June 27 , 2023 392 days 266 0
  • அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் மற்றும் மருத்துவத் துறைகளைச் சேர்ந்த இந்தியப் புலம்பெயர்ந்தோரை இந்தியக் கல்வி மற்றும் ஆராய்ச்சி & மேம்பாட்டு நிறுவனங்களுடன் இணைப்பதற்கான ஒரு புதிய கூட்டுறவுத் திட்டத்தினை அரசாங்கம் தொடங்கியுள்ளது.
  • VAIBHAV என்பது வைஷ்விக் பாரதிய வைகியானிக் என்பதைக் குறிக்கிறது.
  • இந்தப் புத்தாய்வு மாணவர் திட்டமானது, அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையால் செயல்படுத்தப்பட உள்ளது.
  • அந்தந்த நாடுகளில் பல்வேறு ஆராய்ச்சி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள இந்திய வம்சாவளியைச் சேர்ந்த (NRI/OCI/PIO) பல்வேறு சிறந்த அறிவியலாளர்கள்/தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோருக்கு இது வழங்கப்படும்.
  • 75 புத்தாய்வு மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்ட 18 அறிவு சார் துறைகளில் பணியாற்ற அழைக்கப்படுவார்கள்.
  • இதில் குவாண்டம் தொழில்நுட்பம், சுகாதாரம், மருந்து, மின்னணுவியல், வேளாண்மை, எரிசக்தி, கணினி அறிவியல் மற்றும் பொருள் சார் அறிவியல் உள்ளிட்டவை அடங்கும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்