மோசமான வானிலையை எதிர்கொள்வதில் விமானிகளுக்கு உதவும் வகையிலான புதுமை மிக்க ஒரு தீர்வை இந்திய விமானப் படையானது அறிமுகப்படுத்தியுள்ளது.
இது அவர்களுக்கு நிலப்பரப்பில் அமைந்துள்ள கட்டுப்பாட்டு மையத்துடனான தடையில்லா தகவல்தொடர்புகளை வழங்குகிறது.
'Vayulink' என அழைக்கப்படுகின்ற இந்தத் தரவு இணைப்பு தொடர்பு வசதியானது இந்தியப் பிராந்தியக் கண்காணிப்புச் செயற்கைக்கோள் அமைப்பை (IRNSS) பயன்படுத்துகிறது.
Vayulink என்பது ஒரு தற்காலிக தரவு இணைப்பு தகவல் தொடர்பு அமைப்பாகும்.
இது ஒரு விமானத்தில் பொருத்தப்படும் போது, அருகிலுள்ள மற்ற விமானங்களின் இடம் குறித்தத் தகவல்களைப் பாதுகாப்பான ஊடகம் மூலமாக மறை குறியாக்கப் பட்ட தொடர்புத் தரவை வழங்குகிறது.