TNPSC Thervupettagam
July 15 , 2021 1139 days 626 0
  • விரைவில் ஆவியாகும் பொருட்கள் குறித்து ஆராய்ச்சி செய்வதற்கான துருவ ஆய்வு உலாவி (Volatiles Investigating Polar Exploration Rover - VIPER) எனும் தனது விண்கலத்தினை 2023 ஆம் ஆண்டில் விண்வெளியில் செலுத்த உள்ளதாக நாசா அறிவித்துள்ளது.
  • நிலவில் கிடைக்கப் பெறும் வளங்களைக் கொண்டு மனிதன் அங்கு இருக்க முடியுமா என்பதை அறிய இந்த திட்டம் மேற்கொள்ளப்படுகிறது.
  • VIPER என்பது  ஒரு நடமாடும் எந்திரமாகும்.
  • இது வேறு எந்தவொரு வானியல் பொருளுக்கும் இதுவரை அனுப்பப்படாத வகையிலான வளங்களை வரைபடமிடும் முதல் திட்டமாகும்.
  • நாசாவினுடைய வணிக ரீதியிலான சந்திரக் கிரகத்திற்கான விண்வெளிச் சேவை வழங்கும் நிறுவனமானது (Commercial Lunar Payload Services) இந்த நூறு நாள் அளவிலான திட்டத்தின் ஒரு விண்கலனை விண்ணில் செலுத்துவதற்கான விண்கலம் மற்றும் தரையிறங்கு கலனை வழங்க உள்ளது.

திட்டத்தின் நோக்கங்கள்

  • நிலவின் தென்துருவப் பகுதியை ஆய்வு செய்தல்.
  • நிலவின் வளங்களைப் பற்றிய வரைபடத்தை உருவாக்க உதவுதல்.
  • நிலவின் பரப்பிலுள்ள நீர் மற்றும் இதர வளங்களின் செறிவினை மதிப்பிடுதல்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்