TNPSC Thervupettagam

VisioNxt முன்னெடுப்பு

September 13 , 2024 19 days 59 0
  • மத்திய ஜவுளித் துறை அமைச்சகம் ஆனது தேசிய ஆடை வடிவமைப்பு தொழில் நுட்பக் கல்லூரியின் (NIFT) ‘VisioNxt ஆடை வடிவமைப்பு முன்கணிப்பு முன்னெடுப்பு’ என்ற ஒரு முன்னெடுப்பினைத் தொடங்கியுள்ளது.
  • இது ஓர் இருமொழியிலான இணைய தளம் மற்றும் இந்தியா சார்ந்த ஆடை வடிவமைப்புப் போக்குகள் அடங்கிய புத்தகம் ‘பரிதி 24x25’ ஆகும்.
  • NIFT VisioNxt என்பது ஆடை வடிவமைப்புப் போக்கு சார்ந்தத் தகவல்கள் மற்றும் முன்னறிவிப்புகளை உருவாக்குவதற்காக வேண்டி செயற்கை நுண்ணறிவு மற்றும் உணர்வியல் நுண்ணறிவு ஆகியவற்றினை இணைக்கச் செய்யும் இந்தியாவின் முதல் முன்னெடுப்பாகும்.
  • இந்தியாவின் நேர்மறையான பன்முகத் தன்மை, கலாச்சார பன்முகத் தன்மை மற்றும் சமூக-பொருளாதார நுணுக்கங்களை பிரதிபலிக்கும் குறிப்பிட்ட இடங்களில் நிலவும் போக்குகளை நன்கு அடையாளம் கண்டு, பதிவு செய்து, பகுப்பாய்வு செய்வதே இதன் நோக்கமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்