TNPSC Thervupettagam
September 18 , 2024 66 days 116 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆகிய இரண்டும் இணைந்து செங்குத்தாக ஏவக்கூடிய ஒரு குறுகிய தூர வரம்பிலான எறிகணையின் (VL-SRSAM) சோதனையை வெற்றிகரமாக நடத்தியுள்ளன.
  • VL-SRSAM என்பது ஒரு விரைவு எதிர்வினையாற்றும் எறிகணையாகும். இது எல்லா திசைகளிலிருந்தும் வரும் அச்சுறுத்தல்களைக் கண்டறிந்து தாக்கக்கூடியது.
  • இந்தியக் கடற்படைக்காக இது முதலில் 40 கி.மீ தூரம் உள்ள இலக்குகளைத் தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டது என்ற நிலைமையில் தற்போது 80 கி.மீ வரையிலான இலக்குகளைத் தாக்கும் திறன் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.
  • மாக் 4.5 என்ற அதிகபட்ச வேகத்துடன், இந்த ஆயுத அமைப்பால் 16 கிமீ உயரத்தை அடைய முடியும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்