பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது (DRDO) செங்குத்து நிலையில் ஏவக்கூடிய குறைந்த வரம்பு கொண்ட நிலப்பரப்பில் இருந்து வானில் உள்ள இலக்கைத் தாக்கும் (Vertical Launch Short Range Surface to Air Missile - VL-SRSAM) ஏவுகணையின் வெற்றிகரமான 2 சோதனைகளை நடத்தியது.
VL-SRSAM ஆனது இந்தியக் கடற்படைக்காக DRDO அமைப்பினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.
இது கடல் வழி இலக்குகள் உள்ளிட்ட மிகக் குறுகிய வரம்பில் பல்வேறு வான்வழி இலக்குகளைத் தடுத்து அழிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.