பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பு மற்றும் இந்தியக் கடற்படை ஆகியவை இணைந்து VL-SRSAM எனப்படும் செங்குத்தாக ஏவக்கூடிய, ஒரு குறுகிய வரம்புடைய நிலம் விட்டு வானில் பாயும் ஏவுகணையினை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளனர்.
VL-SRSAM ஏவுகணையானது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உருவாக்கப்பட்டதாகும்.
இந்த ஏவுகணைகள் இந்தியக் கடற்படைக்காக உருவாக்கப்பட்டுள்ளன.
கடல்சார் ரேடார்களிலிருந்துத் தப்பிக்கும் இலக்குகள் உட்பட பல்வேறு வான்வழி அச்சுறுத்தல்களை அவை எதிர்கொள்ளும்.
இது பராக்-1 எனப்படும் பழைய, நிலத்தை விட்டு வானிற்குப் பாயக்கூடிய வான்வழி ஏவுகணை அமைப்பிற்கு மாற்றாக அமையும்.
இந்த ஏவுகணை 360 பாகை அளவிலான இடைமறிக்கும் திறனைக் கொண்டது.