தமிழக அரசு முன்னாள் பிரதமர் V.P. சிங் அவர்களுக்குச் சென்னையில் சிலை நிறுவ உள்ளது.
சமூக நீதி மற்றும் பிற விவகாரங்களில் முன்னாள் பிரதமர் ஆற்றியப் பங்களிப்புக்காக "தமிழ் சமுதாயத்தின் நன்றியை" வெளிப்படுத்தும் வகையில் இந்தச் சிலை நிறுவப்பட உள்ளது.
சட்டசபையின் 110வது விதியின் கீழ் தமிழக முதல்வர் அவர்கள் இந்த அறிவிப்பினை வெளியிடார்.
V.P.சிங் அவர்கள் B.P. மண்டல் ஆணையத்தின் பரிந்துரைகளின் படி மத்திய அரசுப் பணி வேலைகளில் இதரப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்காக (OBC) 27% இடஒதுக்கீட்டினை அமல்படுத்தினார்.
1989 ஆம் ஆண்டு டிசம்பர் 02 முதல் 1990 ஆம் ஆண்டு நவம்பர் 10 ஆம் தேதி வரை வெறும் 11 மாதங்கள் மற்றும் 8 நாட்கள் மட்டுமே இவர் பிரதமராக இருந்தார்.