TNPSC Thervupettagam
January 20 , 2023 549 days 304 0
  • பாதுகாப்பு கொள்முதல் சபையானது, மிகக் குறுகிய தூர வரம்புடைய வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு அல்லது VSHORAD ஏவுகணை அமைப்பினை வாங்குவதற்காக, தேவை உணர்வு ஒப்புதலினை (AoN) வழங்கியுள்ளது.
  • இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
  • VSHORADS என்பது மனிதர்களால் சுமந்துச் செல்லக் கூடிய வகையிலான வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு (MANPAD) ஆகும்.
  • குறுகிய தொலைவு வரம்புகளில் உள்ள தாழ்மட்ட அளவிலான வான்வழி அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதற்கான இந்த ஏவுகணையானது, இரட்டை உந்துதல் கொண்ட திட எரிபொருள் இயக்கி மூலம் செலுத்தப்படுகிறது.
  • தேவை உணர்வு ஒப்புதல் (AoN) என்பது பாதுகாப்புத் துறையில் நீண்டகால மூலதன அமைப்புகளின் கொள்முதல் செயல்முறையின் முதல் படிநிலையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்