பாதுகாப்பு கொள்முதல் சபையானது, மிகக் குறுகிய தூர வரம்புடைய வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு அல்லது VSHORAD ஏவுகணை அமைப்பினை வாங்குவதற்காக, தேவை உணர்வு ஒப்புதலினை (AoN) வழங்கியுள்ளது.
இது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பினால் வடிவமைக்கப்பட்டு உருவாக்கப் பட்டுள்ளது.
VSHORADS என்பது மனிதர்களால் சுமந்துச் செல்லக் கூடிய வகையிலான வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு (MANPAD) ஆகும்.
குறுகிய தொலைவு வரம்புகளில் உள்ள தாழ்மட்ட அளவிலான வான்வழி அச்சுறுத்தல்களை எதிர் கொள்வதற்கான இந்த ஏவுகணையானது, இரட்டை உந்துதல் கொண்ட திட எரிபொருள் இயக்கி மூலம் செலுத்தப்படுகிறது.
தேவை உணர்வு ஒப்புதல் (AoN) என்பது பாதுகாப்புத் துறையில் நீண்டகால மூலதன அமைப்புகளின் கொள்முதல் செயல்முறையின் முதல் படிநிலையாகும்.