TNPSC Thervupettagam
October 7 , 2022 654 days 373 0
  • பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, மிகக் குறுகிய தூர வரம்பு உடைய வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணையின் இரண்டு வெற்றி கரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
  • இது மனிதனால் எளிதில் சுமந்து செல்லக்கூடிய வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு (MANPAD) ஆகும்.
  • இந்த ஏவுகணையானது, குறைந்த உயரத்தில் உள்ள வான்வழி இலக்குகளை குறுகிய தூர வரம்பிலேயே எதிர்கொள்ளும் திறன் கொண்டது.
  • இது இரட்டை உந்துதல் திறன் கொண்ட திட விசைப்பொறி மூலம் இயக்கப்படுகிறது.
  • MANPADS என்பது குறுகிய தூர, இலகுரக மற்றும் எளிதில் சுமந்து செல்லக்கூடிய தரையிலிருந்து வானை நோக்கிப் பாயக்கூடிய ஏவுகணைகள் ஆகும்.
  • விமானம் அல்லது ஹெலிகாப்டர்களை அழிக்கச் செய்வதற்காக தனிநபர்கள் அல்லது சிறு குழுக்களினால் இதனை இயக்க இயலும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்