பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு அமைப்பானது, மிகக் குறுகிய தூர வரம்பு உடைய வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு (VSHORADS) ஏவுகணையின் இரண்டு வெற்றி கரமான சோதனைகளை மேற்கொண்டுள்ளது.
இது மனிதனால் எளிதில் சுமந்து செல்லக்கூடிய வான்வழிப் பாதுகாப்பு அமைப்பு (MANPAD) ஆகும்.
இந்த ஏவுகணையானது, குறைந்த உயரத்தில் உள்ள வான்வழி இலக்குகளை குறுகிய தூர வரம்பிலேயே எதிர்கொள்ளும் திறன் கொண்டது.
இது இரட்டை உந்துதல் திறன் கொண்ட திட விசைப்பொறி மூலம் இயக்கப்படுகிறது.
MANPADS என்பது குறுகிய தூர, இலகுரக மற்றும் எளிதில் சுமந்து செல்லக்கூடிய தரையிலிருந்து வானை நோக்கிப் பாயக்கூடிய ஏவுகணைகள் ஆகும்.
விமானம் அல்லது ஹெலிகாப்டர்களை அழிக்கச் செய்வதற்காக தனிநபர்கள் அல்லது சிறு குழுக்களினால் இதனை இயக்க இயலும்.