TNPSC Thervupettagam
May 2 , 2023 577 days 314 0
  • ஐக்கிய நாடுகள் சபையின் 2023 ஆம் ஆண்டு நீர்வள மாநாடானது நியூயார்க் நகரில் நடைபெற்றது.
  • 46 ஆண்டுகளுக்குப் பிறகு தண்ணீர் தொடர்பாக நடத்தப்பட்ட முதல் சந்திப்பு இது ஆகும்.
  • முன்னதாக 1977 ஆம் ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபையின் நீர்வள மாநாடு நடத்தப் பட்டது
  • 2023 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் நீர்வள மாநாட்டில் வெளியிடப்பட்ட W12+  செயல்திட்டமானது நீர் வளப் பாதுகாப்பு தொடர்பான சவால்களுக்கான ஒரு தகவல் பகிர்விற்கான உறுதிப்பாட்டினை வழங்கியது.
  • இது நகர்ப்புற நீர்வளப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை வழங்கும் ஒரு இயங்கலை தகவல் கருவியாகும்.
  • நகர்ப்புற நீர்வளப் பிரச்சினைகளுக்கான W12+ திட்டங்களில் இதுவும் ஒன்றாகும்.
  • எளிதில் ஆய்வு செய்யக் கூடிய நிகழ்வு ஆய்வுகள் மூலம் பொதுவான நகர்ப்புற நீர்வளப் பிரச்சினைகளை எவ்வாறு எதிர்கொள்வது என்பது பற்றிய நுண்ணறிவை வழங்கும் ஒரு கருவியை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்தியாவில் இருந்து பெங்களூரு மற்றும் சென்னை ஆகிய இரண்டு நகரங்கள் இந்தச் செயல்திட்டத்தில் பட்டியலிடப்பட்டுள்ளன.
  • நகரங்களின் தகவல் அமைப்புகளைக் கொண்டிருக்கும் இது யுனெஸ்கோவின் ஒரு நடைமுறையாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்