உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (WADA) தரவுகளின் படி, ஊக்கமருந்து உபயோகிக்கும் நபர்களை மிகவும் அதிக சதவீதத்தில் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
அதிகளவில் விளையாட்டு பங்கேற்பாளர்களை கொண்ட ரஷ்யா (85), அமெரிக்கா (84), இத்தாலி (73) மற்றும் பிரான்சு (72) போன்ற சில முக்கிய நாடுகளை விட இந்தியாவில் ஊக்கமருந்து பயன்பாட்டு மீறல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
இந்தியர்களின் மொத்தச் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் 4,064 (சிறுநீர், இரத்தம் மற்றும் விளையாட்டு வீரர்களின் உயிரியல் தரவு பதிவேடு ஆகியவை) ஆக உள்ளது.
தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாக என்று 127 இந்திய விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டனர் என்ற நிலையில் இது சேகரிக்கப்பட்ட மாதிரி அளவின் 3.26% ஆகும்.
இந்தியாவைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா இதில் இரண்டாவது இடத்தையும், பாங்காக்கின் சோதனை ஆய்வகம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகியவை முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றன.