TNPSC Thervupettagam

WADA ஊக்கமருந்து எதிர்ப்பு அறிக்கை

April 12 , 2024 225 days 240 0
  • உலக ஊக்கமருந்து தடுப்பு முகமையின் (WADA) தரவுகளின் படி, ஊக்கமருந்து உபயோகிக்கும் நபர்களை மிகவும் அதிக சதவீதத்தில் கொண்ட நாடாக இந்தியா உருவெடுத்துள்ளது.
  • அதிகளவில் விளையாட்டு பங்கேற்பாளர்களை கொண்ட ரஷ்யா (85), அமெரிக்கா (84), இத்தாலி (73) மற்றும் பிரான்சு (72) போன்ற சில முக்கிய நாடுகளை விட இந்தியாவில் ஊக்கமருந்து பயன்பாட்டு மீறல்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
  • இந்தியர்களின் மொத்தச் சேகரிக்கப்பட்ட மாதிரிகள் 4,064 (சிறுநீர், இரத்தம் மற்றும் விளையாட்டு வீரர்களின் உயிரியல் தரவு பதிவேடு ஆகியவை) ஆக உள்ளது.
  • தடை செய்யப்பட்ட ஊக்கமருந்துகளைப் பயன்படுத்தியதாக என்று 127 இந்திய விளையாட்டு வீரர்கள் கண்டறியப்பட்டனர் என்ற நிலையில் இது சேகரிக்கப்பட்ட மாதிரி அளவின் 3.26% ஆகும்.
  • இந்தியாவைத் தொடர்ந்து, தென்னாப்பிரிக்கா இதில் இரண்டாவது இடத்தையும், பாங்காக்கின் சோதனை ஆய்வகம் மூன்றாவது இடத்தையும் பிடித்தது.
  • அமெரிக்கா மற்றும் கத்தார் ஆகியவை முறையே நான்காவது மற்றும் ஐந்தாவது இடங்களைப் பெற்றன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்