இந்தியாவில் குத்துச்சண்டை விளையாட்டை ஊக்குவித்து அதனை மேம்படுத்தும் முயற்சியாக WAKO இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பினை தேசிய விளையாட்டுக் கூட்டமைப்பாக விளையாட்டுத் துறை அமைச்சகம் அங்கீகரித்துள்ளது.
WAKO இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பானது உலக குத்துச்சண்டை அமைப்புகள் சங்கத்துடன் இணைக்கப்பட்ட ஒரு அமைப்பாகும்.
WAKO என்பது குத்துச்சண்டைப் போட்டிக்கான உலக அமைப்பாகும்.
குறிப்பு
WAKO அமைப்பானது 2020 ஆம் ஆண்டு நவம்பர் 30 முதல் சர்வதேச ஒலிம்பிக் குழுவின் அங்கீகரிக்கப்பட்ட தற்காலிக உறுப்பினராக இருந்து வருகிறது.
இதற்கான முழு அங்கீகாரமானது 2021 ஆம் ஆண்டு ஜூலை மாத டோக்கியோவில் நடைபெற உள்ள IOC கூட்டத்தில் வழங்கப் படும்.