WASH பிரிவுகள் பற்றிய உலக சுகாதாரம் மற்றும் குடிநீர் பற்றியப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு அறிக்கை
December 20 , 2022 704 days 368 0
உலக சுகாதாரம் மற்றும் குடிநீர் பற்றியப் பகுப்பாய்வு மற்றும் மதிப்பீட்டு (GLAAS) அறிக்கையினை உலக சுகாதார அமைப்பு மற்றும் ஐக்கிய நாடுகள் - தண்ணீர் வள அமைப்பு ஆகியவை இணைந்து வெளியிட்டன.
இந்த அறிக்கையானது, 121 நாடுகள் மற்றும் பிரதேசங்கள் மற்றும் 23 வெளிநாட்டு ஆதரவு பெறும் முகமைகள் ஆகியவற்றிலிருந்து குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WASH) பற்றியப் புதிய தரவுகளைத் தொகுக்கிறது.
அத்தியாவசிய குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WASH) ஆகிய துறை சார்ந்தப் பணிகளை மேலாண்மை செய்வதற்குப் போதுமான மனித வளங்களைப் பேணி வருவதாக மூன்றில் ஒரு பங்கிற்கும் குறைவான நாடுகள் தெரிவித்துள்ளன.
45% நாடுகள் தங்கள் குடிநீர்ப் பாதுகாப்பு இலக்குகளை அடையும் பாதையில் செயல் படுகின்ற வேளையில் 25% நாடுகள் மட்டுமே தனது துப்புரவு சார்ந்த இலக்குகளை எட்டுகின்றன.
குடிநீர் மற்றும் துப்புரவிற்கான உதவி 2017 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில் 5.6% குறைந்துள்ளதோடு, மேலும் உதவி வழங்கப்படுவதற்கான புவியியல் சார்ந்த பரவல் இலக்குகளும் மாற்றப்பட்டுள்ளன.
ஆப்பிரிக்காவின் துணை-சஹாரா பகுதியில் குடிநீர், துப்புரவு மற்றும் சுகாதாரம் (WASH) ஆகிய துறைகளுக்கு வழங்கப்படும் உதவியின் விகிதம் 32 சதவீதத்திலிருந்து 23% ஆகக் குறைந்துள்ளது.
மத்திய மற்றும் தெற்கு ஆசிய நாடுகளில், இது 12 சதவீதத்திலிருந்து 20% ஆகவும், கிழக்கு மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில், 11 சதவீதத்திலிருந்து 20% ஆகவும் அதிகரித்துள்ளது.