மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் என்பவர் ஆர்வமுள்ள பெண்கள் தொழில்முனைவோருக்கான கழிவு மேலாண்மை விரைவுத் திட்டத்தைத் (Waste Management Accelerator for Aspiring Women Entrepreneurs - WAWE Summit 2019) தொடங்கினார்.
WAWE உச்சி மாநாடானது 2019 ஆம் ஆண்டு நவம்பர் - டிசம்பர் ஆகிய மாதங்களில் நடைபெற இருக்கின்றது.
இது கழிவு மேலாண்மையில் தொழில்முனைவோரை ஊக்குவிப்பதற்கும் ஒற்றைப் பயன்பாடு கொண்ட நெகிழிப் பைகளுக்கு மாற்றீடுகளை வழங்குவதற்கும் ஒன்று சேர்ந்த இளம் மாணவிகளின் மிகப்பெரிய கூட்டமாகும்.
இந்த நிகழ்வின் கருத்துரு, “உங்கள் சொந்தப் பையை நீங்களே உருவாக்குங்கள்” என்பதாகும்.
இந்தக் கருத்தாக்கத்திலிருந்து ஒரு வணிகத்தை உருவாக்குவதன் மூலம் வருமானத்தை உருவாக்கும் நடவடிக்கைகள் மற்றும் கழிவு நிர்வாகத்தில் தொழில்முனைவு நடவடிக்கைகள் ஆகியவற்றை மேற்கொள்ள பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.