2021-2022 ஆம் நிதி ஆண்டின் (அதாவது அக்டோபர் 2021 முதல் மார்ச் 2022) 2வது அரையாண்டிற்கான வழிவகை முன்பணத்திற்கான வரம்பினை இந்திய ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ளது.
அதற்கான வரம்பு ரூ.50,000 கோடியாகும்.
வழிவகை முன்பண வரம்பின் 75 சதவீதத்தை இந்திய அரசு உபயோகிக்கும் போது புதிய சந்தைக் கடன்களை இந்திய ரிசர்வ் வங்கி வழங்கலாம்.
சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசுடன் ஆலோசித்து, எந்த நேரத்திலும் இந்த வரம்பினைத் திருத்தி அமைப்பதற்கான உரிமையை இந்திய ரிசர்வ் வங்கி தக்க வைத்துள்ளது.