முதன்முறையாக, இந்தியாவில் உள்ள ஒரு மிருகக்காட்சிசாலையின் வளங்காப்பு -இனப் பெருக்கத் திட்டம் ஆனது, உலக உயிரியல் பூங்காக்கள் மற்றும் நீர்வாழிடச் சங்கத்தின் (WAZA) 2024 ஆம் ஆண்டு வளங்காப்பு மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மை விருதுகளுக்கான இறுதிப் பட்டியலில் ஒன்றாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.
அது பத்மஜா நாயுடு இமயமலை விலங்கியல் பூங்காவின் சிகப்பு நிறப் பாண்டா வளங் காப்பு இனப்பெருக்கம் மற்றும் எண்ணிக்கை அதிகரிப்புத் திட்டம் ஆகும்.
1990 ஆம் ஆண்டு டார்ஜிலிங் மிருகக் காட்சிசாலையில் நான்கு சிகப்புப் பாண்டாக்கள் கொண்டு செல்லப்பட்டு இந்த இனப்பெருக்கத் திட்டம் தொடங்கப் பட்டது.