சிங்கப்பூர் நாட்டினைச் சேர்ந்த தொழில்முறை குத்துச்சண்டை வீராங்கனையான (Professional boxer) நூர்ஷாஹிதா ரோஸ்லியே (Nurshahidah Roslie) உலக குத்துச்சண்டை கவுன்சிலின் (World Boxing Council-WBC) ஆசியாவின் ஆண்டிற்கான பெண் சாம்பியனாக (WBC Asia's Female Champion of the Year) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
ஆசிய குத்துச் சண்டை கவுன்சில் (Asian Boxing Council) என்று முறையாக அழைக்கப்படும் உலக குத்துச் சண்டை கவுன்சில் ஆசியா (WBC Asia) அமைப்பானது உலக குத்துச்சண்டை கவுன்சிலின் இணை (affiliate) அமைப்பாகும்.
உலக குத்துச்சண்டை கவுன்சில் ஆனது உலகின் நான்கு முக்கிய குத்துச்சண்டைக்கான அங்கீகரிக்கப்பட்ட அமைப்புகளில் (Boxing sanctioning body) ஒன்றாகும்.
உலகின் பிற முக்கிய அங்கீகரிக்கப்பட்ட குத்துச் சண்டை அமைப்புகளாவன.
உலக குத்துச் சண்டை கழகம்-(World Boxing Organisation-WBO)
சர்வதேச குத்துச் சண்டை சம்மேளனம் (International Boxing Federation -IBF)
உலக குத்துச் சண்டை சங்கம் (World Boxing Association -WBA)