பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக உலக மகளிர் தினத்தன்று தெலுங்கானா மாநில அரசு பெண் தொழில்முனைவோர்கள் முனையத்தை (Women Entrepreneurship Hub-WE Hub) தொடங்கியுள்ளது.
பெண் தொழில்முனைவோருக்காகப் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள, மாநில அரசால் வழி நடத்தப்படும் இந்தியாவின் முதல் தொழிற்முனைவுக் காப்பகம் (Incubator) இதுவேயாகும்.
பெண் தொழில் முனைவோர்கள் எளிதில் தொழில் தொடங்குவதற்கு உகந்த சூழ்நிலை (enabling environment), வழிகாட்டுதல்கள் (mentorship) மூலதனம் (capital) போன்றவற்றிற்கு இம்முனையம் ஒரு அணுகுதலை வழங்கும்.
We Hub தொடக்க நிகழ்வின் போது 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவை ஆறும் சமூக புத்தாக்கத் திட்டங்கள், பணியரங்குகள், கூட்டுத் தொழில்முனைவு காப்பகத் திட்டங்கள் மூலம் பெண் தொழில் முனைவை (women entrepreneurship) மேம்படுத்த உதவும்.