TNPSC Thervupettagam
March 11 , 2018 2322 days 864 0
  • பெண் தொழில்முனைவோர்களை ஊக்குவிப்பதற்காக உலக மகளிர் தினத்தன்று தெலுங்கானா மாநில அரசு பெண் தொழில்முனைவோர்கள் முனையத்தை (Women Entrepreneurship Hub-WE Hub) தொடங்கியுள்ளது.
  • பெண் தொழில்முனைவோருக்காகப் பிரத்யேகமாக ஏற்படுத்தப்பட்டுள்ள,   மாநில அரசால் வழி நடத்தப்படும் இந்தியாவின் முதல் தொழிற்முனைவுக் காப்பகம் (Incubator)  இதுவேயாகும்.
  • பெண் தொழில் முனைவோர்கள் எளிதில் தொழில் தொடங்குவதற்கு  உகந்த சூழ்நிலை (enabling environment), வழிகாட்டுதல்கள் (mentorship) மூலதனம்   (capital) போன்றவற்றிற்கு இம்முனையம்  ஒரு அணுகுதலை வழங்கும்.
  • We Hub தொடக்க நிகழ்வின் போது 6 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளன. இவை ஆறும் சமூக புத்தாக்கத் திட்டங்கள், பணியரங்குகள், கூட்டுத் தொழில்முனைவு காப்பகத் திட்டங்கள் மூலம் பெண் தொழில் முனைவை (women entrepreneurship)   மேம்படுத்த உதவும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்