ட்விட்டர் ஊடக நிறுவனத்தின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி ஜாக் டோர்சி ட்விட்டரில் ‘Web5 ’ என்ற புதிய தளத்தை அறிவித்துள்ளார்.
இது பிட்காயின் பிளாக்செயினில் கட்டமைக்கப்பட்ட Web3 மற்றும் Web 2.0 ஆகியவற்றின் கலவையாகும்.
தனிப்பட்ட தரவைப் பாதுகாப்பதில் உள்ள சிக்கலைச் சரி செய்வதாக இந்த இயங்கு தளம் உறுதியளிக்கிறது.
Web5 ஆனது டோர்சியின் பிளாக் நிறுவனத்தில் (முன்பு ஸ்கொயர் எனப்பட்டது) உள்ள பிட்காயின் வணிகப் பிரிவுகளில் ஒன்றான தி பிளாக் ஹெட் (TBH) நிறுவனத்தினால் உருவாக்கப் பட்டது.